Pradosha Pooja Mahima

பிரதோஷம் !

🌀 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

விரத முறை :

🌿 வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று காலையில் எழுந்து நீராடி, சிவநாம சிந்தனையுடன் சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும்.

🌿 பிரதோஷ வேலை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையுள்ள காலமாகும். பிரதோஷ வேளையில் சிவலிங்க மூர்த்தியை இடப தேவரின் இரு கொம்புகளுக்கிடையே கண்டு வணங்க வேண்டும்.

🌿 பிரதோஷ நேரத்தில் தேவியுடன் கூடிய சந்திரசேகரர் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதை வணங்க வேண்டும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

🌿 முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாவது சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்து கேட்க வேண்டும்.

பலன்கள் :

🌠 பிரதோஷ தினத்தை வழிபடுவதால் சுப மங்களம் நல் எண்ணம், நல் அருள் கிடைக்கும். பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். நல்ல புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணத்தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். எதிரிகளின் எதிர்ப்பு விலகும். அனைத்து துன்பமும் விலகும்.

செவ்வாய்ப்பிரதோஷம் - பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.

மார்கழி பிரதோஷ சிறப்பு :

மார்கழி மாத பிரதோஷ வழிப்பாட்டில் வெண்பொங்கலும், கடலை சுண்டலும் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் நீங்குகின்றன.

பிரதோஷ பு ஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் : 

1. பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்

2. தயிர் - பல வளங்களும் உண்டாகும் 

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும் 

4. பழங்கள் - விளைச்சல் பெருகும் 

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும் 

6. நெய் - முக்தி பேறு கிட்டும் 

7. இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும் 

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும் 

9. எண்ணெய் - சுகவாழ்வு 

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம் 

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

நோய் நொடிகளின்றி, செல்வ சிறப்புடன் வாழ இந்த மார்கழி மாத பிரேதாஷ நாளில் நந்திதேவனை வழிபட்டு மகிழ்வோம்!..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...